ஆண்டிராய்டு பயனர்களுக்காகச் செல்லினத்தின் இரண்டாம் பதிகை

Sellinam Version 2.0 for Android

கடந்த மூன்று மாதங்களாகச் சோதனை ஓட்டத்தில் இருந்த ஆண்டிராய்டு செல்லினத்தின் இரண்டாம் பதிகை (version) இப்போது புதிய சின்னத்துடன் பொதுப் பயனீட்டிற்குத் தயாராக உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

sellinam-promo-1024x500.png

இந்தப் பதிகையில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே காண்போம்:

1. சொற்பிழை தவிர்த்தல் (auto-correction)

மேம்படுத்தப்பட்ட சொற்பட்டியலும் தவறாக எழுதப்பட்ட சொற்களைத் திருத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முரசு அஞ்சல் விசைப்பலகையைப் பயன்படுத்துவோருக்குப் பேருதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, முரசு அஞ்சலில் l (lower case L) விசையைத் தட்டினால் ல் தோன்றும். எனவே ilamai என்று கோத்தால் இலமை என்றுதான் வரும். ஆனால், இந்தப் புதிய பதிகையில் ilamai என்று கோத்து இடைவெளியிட்டால் இலமை என்பதற்குப் பதிலாக இளமை எனும் சொல்லே தேர்ந்தெடுக் கொடுக்கும். இதுபோல பல சொற்பிழை திருத்தும் வசதிகள் இரண்டு தமிழ் விசைப்பலகைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

device-2013-11-03-171806.png device-2013-11-03-171729.png

device-2013-11-03-171853.png device-2013-11-03-193130.png

2. எண்களை உள்ளிடுதல் (long press for numbers)

எண்களை உள்ளிடும்போது [123] எனும் விசையத் தட்டி அதன்பின் தோன்றும் symbols விசைப்பலகையைக் கொண்டு எண்களை உள்ளிடும் நிலை இருந்தது. புதிய செல்லினத்தில் முதல் வரிசையில் உள்ள விசைகளைச் சற்று நீண்ட நேரம் அழுத்தி (long press) எண்களை உள்ளிடலாம். இதுபோலவே முரசு அஞ்சல் விசைப்பலகையிலும் ல/ள, ர/ற, ந/ன/ண எழுத்துகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

device-2013-11-03-171031.png device-2013-11-03-171422.png

3. அதிகரிக்கப்பட்ட பரிந்துரைகள் (extended suggestions list)

சொற்களைக் கோக்கும்போது விசைப்பலகையின் மேல் தோன்றும் பரிந்துரைக்கப்பட்ட சொற்பட்டியலைப் புதிய பதிகையில் விரிவாக்கலாம். பட்டியலின் ஓரத்தில் தோன்றும் [▼] சின்னத்தைத் தொட்டால் பட்டியல் விரிவாக்கப்படும்.

device-2013-11-03-171602.png device-2013-11-03-171518.png

இவைத் தவிர மேலும் பல திருத்தங்களையும் சேர்க்கைகளையும் ஆண்டிராய்டு செல்லினம் 2.0 கொண்டுவருகின்றது. பெற்றுப் பயனெய்துமாறு உங்களை அழைக்கின்றோம்!

பதிவிறக்க முகவரி: https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam

 

Did you like this? Share it: