ஆப்பிள் – சாட்ஜிபிடி ஒருங்கிணைப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளில் சாட்ஜிபிடியின் பயன்பாடு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது பயனர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக வந்திருக்கிறது. சாட்ஜிபிடியின் பெரும்பான்மையான அம்சங்கள் ஆப்பிள் நிறுவனக் கணினிகள், செல்பேசிகள் மற்றும் ஐபேட்களில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஒருங்கிணைப்பு இன்னும் ஆரம்பக்கட்டத்தில் இருந்தாலும் அடுத்தடுத்த பதிப்புகளில் இதில் மேம்பாட்டினைக் கொண்டுவர ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ஆப்பிள் கருவிகளில் பயன்படுத்தப்படும் நோட்ஸ் செயலியிலும் சாட்ஜிபிடியின் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைப் பயன்படுத்த முடியும். இதற்காக சாட்ஜிபிடியின் சந்தாதாரராக இருக்க வேண்டியது அவசியம். 

ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் நோட்ஸ், போட்டோஸ், சிரி, சஃபாரி உள்ளிட்ட அனைத்து செயலிகளோடும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

Apple AI ChatGPT

எழுதுவது தொடர்பான செயலிகளில் இதன் பயன்பாடு சிறப்பாக இருப்பதாகக் கருத்துகள் வெளியாகியிருக்கின்றன. எழுதுவதற்கும் எழுதியவற்றைத் தொகுப்பதற்கும் தொகுத்தவற்றின் பிழை சரிபார்ப்பதற்கும் இந்த செயற்கை நுண்ணறிவு வசதிகள் பயனுள்ளவையாக இருக்கின்றன. 

ஆப்பிளின் இந்த செயற்கை நுண்ணறிவு வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக ஆப்பிள் நிறுவனம் எந்தத் தகவல்களையும் பயனர்களிடமிருந்துப் பெறுவதில்லை என உறுதியளித்திருக்கிறது.

ஆப்பிள் கருவிகளில் சாட்ஜிபிடி வசதிகளைப் பயன்படுத்தும் முன்பு ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு வசதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வசதியைத் தேர்ந்தெடுத்தவுடன் புதிய மென்பொருள் ஒன்று ஆப்பிள் கருவிகளில் நிறுவப்படும்.

ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு வசதி நிறுவப்பட்டவுடன் அதில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் தேர்ந்தெடுப்பதற்கான வசதிகளும் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன. பயனர்கள் அவர்களுக்குத் தேவையான அம்சங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ள இது வழிசெய்கிறது. ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு வசதி முழுவதுமாக நிறுவப்பட்டபிறகு சாட்ஜிபிடியின் செயற்கை நுண்ணறிவு வசதியைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளைப்பெற முடியும். 

சாட்ஜிபிடி வசதியை ஆப்பிள் கருவிகளில் நிறுவியபிறகு அதனை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தவோ அல்லது நிறுத்திக்கொள்ளவோ பயனர்களுக்கு வசதியளிக்கப்பட்டிருக்கிறது. சாட்ஜிபிடிக்கு என்ன தகவல்களை கொடுக்கலாம் என்பதனையும் பயனர்களே தீர்மானித்துக்கொள்ள முடியும். பயனர்கள் தங்களுடைய ஆப்பிள் கணக்குகளைப் பயன்படுத்தியோ அல்லது தனியாகவோ இந்த சாட்ஜிபிடி வசதியை உபயோகித்துக்கொள்ள முடியும். 

ஆப்பிள் கருவிகளில் இந்த சாட்ஜிபிடி வசதி நோட்ஸ் செயலியைப் பயன்படுத்துவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தனித்தனியாக உள்ள நூற்றுக்கணக்கான குறிப்புகளை ஒரு குறிப்பிட்ட சொற்கள் அல்லது குறியீடுகள் பொறுத்து தொகுத்துக்கொள்ள முடியும். பயனர்கள் ஒவ்வொன்றாக இதனைச் செய்வது அவ்வளவு எளிதான செயலல்ல.

  • அ. பாண்டியராஜன்.
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now