சாட்ஜிபிடி மறக்காது

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி அரட்டைச் செயலி இனிமேல் நம்மைப் பற்றிய பயனுள்ள தகவல்களை நினைவில் வைத்திருக்குமாம்.

chatGPT

இந்த வசதி தற்போதைக்கு சாட்ஜிபிடி புரோ, பிளஸ் சந்தாதாரர்களுக்கு மட்டும் வந்திருக்கிறது. படிப்படியாக அனைவருக்கும் விரைவில் கிடைக்கும். என்ன சொல்றீங்க? இதற்கு முன்புகூட நான் பேசியவற்றை சாட்ஜிபிடி நினைவில் வைத்திருக்கிறதே, திரையின் இடது பக்கத்தில் நான் முன்னர் பேசிய தகவல்கள் எல்லாம் இருக்கின்றனவே என்கிறீர்களா? இப்படிப் பட்டியலிடப்பட்டவை வெவ்வேறு நேரத்தில் நீங்கள் சாட்ஜிபிடியுடன் நடத்திய உரையாடல்கள்தாம். இதைத் திரெட் என்கிறது சாட்ஜிபிடி. அந்த உரையாடலை மீண்டும் தொடர நினைத்தால் தொடரலாம்.

சொல்லப்போனால் நீங்கள் குறைவாக இச்செயலியுடன் பேசும் நபர் எனில் சில மாதங்களுக்கு முன்பு பேசிய உரையாடல் கூட அப்படியே ஓரமாக இருக்கும். அதைச் சொடுக்கி விட்ட இடத்தில் இருந்து மீண்டும் உரையாடலைத் தொடர இயலும். ஒரு புதிய உரையாடலில்போது இன்னொரு பழைய உரையாடலில் பேசிய தகவல்களைக் குறிப்பிட்டுப் பேசினால் சாட்ஜிபிடிக்குத் தெரியாது. ஒவ்வொரு புதிய உரையாடலும் தனித்தனியாகத்தான் புரிந்துகொள்ளும். புது அரட்டையில் பேசும் விஷயங்கள் மட்டுமே அதன் நினைவில் இருக்கும். இப்போது அதில்தான் மாற்றம் வந்துள்ளது.

இனிமேல் பயனுள்ள தகவல்களை நினைவில் வைத்திருக்கும் என்கிறார்கள். பயனுள்ள தகவல், பயனில்லாத தகவல் என்றால் என்னங்கய்யா? எனச் சந்தேகம் வந்தால் சாட்ஜிபிடியிடமே கேட்கலாம். உரையாடும் நபரைப் பற்றிய தேவையான தகவல்கள். அவருடைய வேலை, பிடித்த பொழுதுபோக்கு, கலையார்வம், தற்போது செய்து கொண்டிருக்கும் முக்கியமான விஷயம் போன்றவை. அடிக்கடி சாட்ஜிபிடியிடம் என்ன கேட்கிறீர்கள்? படம் வரையச் சொல்கிறீர்களா? கவிதை எழுதி தரச் சொல்லிக் கேட்கிறீர்களா? நிரல் எழுதித் தரப் பணிக்கிறீர்களா? இத்தகவல்களை நினைவில் வைத்திருக்கும்.

இதன் மூலம் நாம் மீண்டும், மீண்டும் தகவல்களைத் தருவதைத் தவிர்க்கலாம். வழக்கமாக பென்சில் கொண்டு வரையப்படும் கருப்பு வெள்ளைப் படங்களை மட்டும்தான் சாட்ஜிபிடியிடம் கேட்பீர்கள் எனில் எந்தப் படத்தைக் கேட்டாலும் நாம் சொல்லாமலே கருப்பு வெள்ளை பென்சில் கோட்டோவியமாகக் கொடுத்துவிடும். அல்லது நாமே குறிப்பிட்டு, எனக்கு எப்போதுமே பைத்தான் மென்பொருளில்தான் நிரல் வேண்டும், இதை நினைவில் வைத்துக்கொள் எனக் கூறினாலும் போதும். அப்படியே நினைவில் வைத்துக்கொண்டு செயல்படும்.

இந்தப் புதிய வசதி மூலம் பயனர்களுக்குத் தனிக்கவனம் எடுத்து பொருத்தமான பதில்களைச் சொல்ல இயலும். என்றாலும் சில பயனர்கள் இதை விரும்பவில்லை. கேட்ட கேள்விக்கு பதிலைச் சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் எதை எதையோ நினைவில் வைத்திருந்தால் எனக்கு உவப்பில்லை என்போர் அதற்கேற்றவாறு செயலியை அமைத்துக் கொள்ளலாம். மருத்துவத் தகவல்கள், கடவுச்சொற்கள், அரசியல் நிலைப்பாடு, வீட்டு முகவரி போன்றவற்றையெல்லாம் பொதுவாகவே நினைவில் வைத்திருக்காது.

நினைவில் வைத்திருந்தால் சிறப்பான சேவை கிடைக்கும் என நினைப்போர் குறிப்பாக எந்தெந்த தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்வது நல்லது. அதற்கான வழிகாட்டுதல்களைக் கீழே கொடுத்துள்ளோம்.

சாட்ஜிபிடி நினைவகம் பற்றிய குறிப்புகள்.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now