செல்லினம் செய்தித் தொகுப்பு – அக்டோபர் 18, 2025

இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

சுழித்துத் தேடும் சேவையில் நானோ பனானா

சுழித்துத் தேடும் சேவையில் நானோ பனானா

கூகுள் தனது நானோ பனானா (Nano Banana) பட உருவாக்கக் கருவியை கூகுள் லென்சு, சுழித்துத் தேடும் சேவை (Circle to Search) போன்ற பல சேவைகளில் இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
இனிமேல் யுஎஸ்பி கம்பி கிடையாது

இனிமேல் யுஎஸ்பி கம்பி கிடையாது

கடந்த சில ஆண்டுகளாக திறன்பேசிகள் எளிமையாகவும் இலகுவாகவும் மாறிவருகின்றன. அவற்றைப்போலவே திறன்பேசி அட்டைபெட்டிகளும் சிறியதாக மாறிவருகின்றன. மின்னழுத்த மாற்றி (Charge adapter) வழங்க மறுக்கப்பட்டதுதான் அட்டை பெட்டிகளின் அளவு குறைந்ததற்கு காரணம். மின்னழுத்த…
இரத்த அழுத்தத்தை கணக்கிடும் பிக்சல்

இரத்த அழுத்தத்தை கணக்கிடும் பிக்சல்

பல்வேறு நிறுவனங்கள் நீண்ட காலமாக திறன் கைக்கடிகாரங்களில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் வசதியை இணைக்க முயன்று வருகின்றன. இப்போது கூகுளும் இந்தப் பட்டியலில் சேரப் போகிறது. பிக்சல் திறன் கைக்கடிகாரத்தில் இரத்த அழுத்த…
யூடியூப் இசையின் புதிய பரிமாணம்

யூடியூப் இசையின் புதிய பரிமாணம்

யூடியூப் இசை, ரசிகர்களையும் கலைஞர்களையும் மேலும் நெருக்கமாக இணைக்கப் போகிறது. “மேட் ஆன் யூடியூப்’ நிகழ்ச்சியில் இதை யூடியூப் நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய மேம்படுத்தல் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிரியமான…
கூகுள் குறுஞ்செய்தி பயன்பாடு

கூகுள் குறுஞ்செய்தி பயன்பாடு

கூகுள் குறுஞ்செய்திகள் செயலியில் பெரும்பாலும் எந்த மாதிரியான செய்திகளை பெறுகிறோம். வங்கிக் கணக்கு பற்று வரவுகள், ஒருமுறை பயன்பாட்டு கடவுச்சொற்கள் (OTP), ஏராளமான விளம்பரங்கள் , தரவு பயன்பாட்டு எச்சரிக்கைகள் போன்றவற்றையே பெறுகிறோம்.…
பாலத்துக்கு விஞ்ஞானி பெயர்

பாலத்துக்கு விஞ்ஞானி பெயர்

தமிழ்நாட்டின் கோயம்புததூர் மாவட்டத்தில் ரூ.1,621 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு, இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் எடிசன் என சொல்லும் அளவிற்கு என்ன செய்தார் ஜி.டி.நாயுடு? என்ற…
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now