சுழித்துத் தேடும் சேவையில் நானோ பனானா

கூகுள் தனது நானோ பனானா (Nano Banana) பட உருவாக்கக் கருவியை கூகுள் லென்சு, சுழித்துத் தேடும் சேவை (Circle to Search) போன்ற பல சேவைகளில் இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூகுள் ஆண்டிராய்டு செயலியின் பதிப்பு 16.40.18ல் இருந்து கிடைத்த தகவல்களின்படி, இந்த அம்சம் விரைவில் பயனர்களுக்குக் கிடைக்கும்.

g circle to search

கூகுள் லென்சில் நானோ பனானா இணைப்பு சற்று முன்னேறிய நிலையில் உள்ளது. தற்போதுள்ள Search, Translate விருப்பங்களுடன் Live, Nano Banana Create எனும் புதிய விருப்பங்களும் சேர்க்கப்படும். பயனர்கள் இதன் மூலம் படங்களைப் பிடித்து, உருவாக்கி, பகிர்ந்துகொள்ள முடியும். முதல்முறையாகப் பயன்படுத்தும்போது நகரும்படக்காட்சியில் (animation) விளக்மும் அறிமுகமும் காட்டப்படும்.

இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவுத் தேடல் முறையில் ஏற்கெனவே காணப்பட்ட இடைமுகத்தை ஒத்திருக்கும். பயனர்கள் தாங்கள் விரும்பும் திருத்தங்களை விவரிக்க வேண்டும், நானோ பனானா அதை படத்தில் செயல்படுத்தும். எடுத்துக்காட்டாக, “இந்தப் படத்தில் வானத்தை மாற்றவும்” என தட்டெழுதினால், செயற்கை நுண்ணறிவு அதை உடனடியாகச் செய்யும்.

படங்களில் திரைப்பிடிப்புகளில் அல்லது திரையில் தெரியும் எதிலும் சுழித்துத் தேடும் வசதியான Circle to Search சேவையிலும் நானோ பனானா இணைப்பு தயாராகிவருகிறது. ஆனால் இது லென்சைவிட ஆரம்ப கட்ட வளர்ச்சியில் உள்ளது. Create என்ற பொத்தான் தெரிந்தாலும், இன்னும் முழுமையாக செயல்படவில்லை.

கூகுள் நானோ பனானாவை தனது அனைத்து சேவைகளிலும் பரவலாகக் கொண்டுவர முயன்று வருகிறது. ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவுத் தேடல் முறையல் இதன் தடங்கள் காணப்பட்டன. இப்போது லென்சு, சுழித்துத் தேடல் ஆகியவற்றிலும் இணைக்கப்படுவதால், பயனர்களுக்கு எளிமையான படத்தொகுப்பு வசதி கிடைக்கும். விரைவில் இவை முழுமையாக செயல்படும் நிலையில் வெளியிடப்படும் எனக் கூகுள் எதிர்பார்க்கிறது.

  • செல்லினம் குழு
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now