பண்டிகைக்குத் தேவை கூகுள் சேவை

பண்டிகை காலம் என்பது மகிழ்ச்சியான நேரமாக இருந்தாலும், திட்டமிடல், பொருள்களை வாங்குதல், விருந்தோம்பல் என பல்வேறு சவால்களையும் கொண்டுவருகிறது. இந்த சிக்கல்களை எளிதாக்க கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு கருவிகள், பயன்பாடுகள் மூலம் பல்வேறு தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அது தொடர்பான ஒன்பது கட்டுரைகளைத் தொகுத்து தன்னுடைய வலைப்பூவில் வெளியிட்டுள்ளது.

festival

1. பொருள்களை வாங்க எளிதான நான்கு வழிகள்

விழாக்காலச் சலுகை விலை கொண்டாட்டத்தில் விலை குறைவைக் கண்காணித்து, வரவு செலவுக்குள் பொருள் வாங்க செயற்கை நுண்ணறிவு உதவும் அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பொருளின் விலை உங்கள் வரவு செலவுக்குள் குறையும்போது அறிவிப்பு வரும், தகுதியான விற்பனையாளர்களிடம் கூகுள் உங்களுக்காக வாங்கவும் செய்யும். செயற்கை நுண்ணறிவு மூலம் பரிசு யோசனைகள் பெறலாம், அருகில் உள்ள கடைகளில் பொருள் இருப்பு உள்ளதா என கூகுள் தானாக அழைத்துக் கேட்கும், மெய்நிகர் முறையில் ஆடைகளை அணிந்து பார்க்கலாம்.

2. விருந்தோம்பலுக்கான 16 குறிப்புகள்

பண்டிகை விருந்துகள் நடத்துபவர்களுக்கு ஜெமினியின் ஜெம்ஸ் (Gems) அம்சம் மூலம் தனிப்பயன் திட்டமிடல் உதவியாளரை உருவாக்கலாம். ஜெமினி லைவ் மூலம் கைகள் ஏதேனும் வேலையில் இருக்கும்போதும் உரையாடலாம். நானோ பனானா ப்ரோ (Nano Banana Pro) மூலம் அழைப்பிதழுக்கான படங்களை உருவாக்கலாம். ஜெமினி ஃபார் ஹோம் (Gemini for Home) சமையலறை உதவியாளராக செயல்படும், கூட்டுப் படங்கள் எடுக்க பிக்சலின் Add Me அம்சம் உதவும்.

3. கூகுள் வரைபடத்தின் நான்கு புதிய பண்டிகை அம்சங்கள்

ஜெமினி திறன்களைப் பயன்படுத்தி உணவகங்கள், தங்குமிடங்கள் பற்றிய “செல்லும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை” குறிப்புகள் கிடைக்கும். Explore தாவல் மூலம் அருகில் புகழ்மிக்க இடங்களைக் கண்டுபிடிக்கலாம். மின்சார வாகன மின்னேற்றிகள் நீங்கள் போய்ச் சேரும்போது கிடைக்குமா என செயற்கை நுண்ணறிவு கணிக்கும், மதிப்புரைகளை மாற்றுப்பெயருடன் எழுத முடியும்.

4. அனைவரும் தேடும் பரிசுகள்

கூகுள் தேடுபொறியின் போக்குகளின் அடிப்படையில் இந்த ஆண்டின் 100 சிறந்த பரிசு யோசனைகளை கூகுள் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பரிசு சார்ந்த தேடல்கள் கூகுளில் நடக்கின்றன, இதிலிருந்து மக்கள் எதை அதிகம் விரும்புகிறார்கள் என தெரிகிறது. படத்திரையிடல் கருவி தேடல்கள் 945 விழுக்காடு உயர்ந்துள்ளன, முதுகுப்பை தொடர்பான பரிசுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இவ்வாறு பல போக்குகளை கூகுள் பகிர்ந்துள்ளது.

இதுபோன்று இன்னும் சில கட்டுரைகளை வெளியட்டு கூகுள் தங்கள் சேவைகளை பயன்படுத்த அழைப்பு விடுத்துள்ளது. அவர்கள் தளத்தில் சென்று பார்க்க கீழே இணைப்பைக் கொடுத்துள்ளோம்.

கூகுள் சேவையில் பண்டிகைக் கொண்டாட்டம்.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now