இணையவழி உரை : “யூனிகோடின் வசதிகளும் பயன்பாடுகளும்”

கொழும்பு : இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் “தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்” என்னும் அமைப்பு நடத்தும் இணையவழி உரையாடல் வரிசையில் மலேசியக் கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவிருக்கிறார்.

“யூனிகோடின் வசதிகளும் பயன்பாடுகளும்” என்ற தலைப்பில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்.

இந்த இணையவழி உரை கீழ்க்காணும் வகையில் நடைபெறும்

நாள் : சனிக்கிழமை 12 செப்டம்பர் 2020

நேரம் : மாலை 7.30 மணி (இலங்கை/இந்திய நேரம்); இரவு 10.00 மணி (மலேசிய/சிங்கப்பூர் நேரம்)

ணைப்பு – https://m.teamlink.co/
நுழைவு எண் – 1702515101

“தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்” அமைப்பு நடத்தும் இணையவழி உரையாடல் வரிசையில் முத்து நெடுமாறனின் உரை 23-வது உரையாக இடம் பெறுகிறது. பங்கு கொள்ளும் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த உரை குறியீடுகளின் அடிப்படையில் இருந்து தொடங்கவுள்ளது.

இந்த உரை நிகழ்ச்சியை தமிழறிதம் செயலாளர் சி.சரவணபவானந்தன் (செல்பேசி எண்: 0766427729) ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்துவார்.

மேல் விவரங்களுக்கு :

info@thamizharitham.org.lk

https://facebook.com/thamizharitham

தொடர்புடையவை:
1. தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்
2. தமிழ் எழுதுரு வளர்ச்சி குறித்து முத்து நெடுமாறன் உரை