அறிவார்ந்த உள்ளீடு – காணொளி பதிவேற்றம்

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா என மூன்று நாடுகளில் நடைபெற்ற முரசு அஞ்சல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி யூட்யூபில் பதிவேற்றப்பட்டுள்ளது.

முரசு அஞ்சல் புதுப் பதிப்பு பரவலாக தரவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அவ்வப்போது பயனர்கள் அனுப்பும் கருத்துகளைக் கொண்டு சில மேம்படுத்தல்களும் செயலியில் சேர்க்கப்பட்டு வருகின்றன. சில நாள்களுக்கு முன்னர் முரசு அஞ்சல் 12.0.3 பதிப்பு வெளியானது. விண்டோஸ் பயனர்கள் அடிப்பட்டையில் (Task bar) இயங்கும் முரசு அஞ்சல் மூலம் எளிதாக உள்ளீட்டு முறை அமைப்புகளைக் கையாளும் வசதி உட்பட பல புதிய அம்சங்கள் அதில் உள்ளன.

வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளிகளும் ஒவ்வென்றாக செல்லினம் யூட்யூப் தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. நிகழ்ச்சியின் முதல் பகுதியான அறிவார்ந்த உள்ளீடு முறைகள் தற்போது வெளியாகியுள்ளது. முரசு அஞ்சல் வரலாறு, புதிய பதிப்பில் உள்ள தனித்துவமான அம்சங்கள் போன்றவற்றை எடுத்துரைக்கும், முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறனின் விளக்கக்காட்சிகள் இக்காணொளியில் இடம்பெற்றுள்ளன.

யூட்யூபில் பார்ப்பதற்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளோம்.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now