அழகு தமிழ் எழுத்துருக்கள் காணொளி

முரசு அஞ்சல் வெளியீட்டு நிகழ்ச்சியின் விளக்கக்காட்சியில் இடம்பெற்ற அழகு தமிழ் எழுத்துரு என்கிற இரண்டாவது பகுதியின் காணொளி யூட்யூபில் பதிவேற்றப்பட்டுள்ளது.

முரசு அஞ்சல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளிகளும் ஒவ்வென்றாக செல்லினம் யூட்யூப் தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. நிகழ்ச்சியின் முதல் பகுதியான அறிவார்ந்த உள்ளீடு முறைகள் பதிவேற்றப்படதைத் தொடர்ந்து தற்போது அழகு தமிழ் எழுத்துரு பகுதி வெளியாகியுள்ளது.

செல்லினம், முரசு அஞ்சல் செயலிகளின் நிறுவனர், வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் தான் புதிதாக உருவாக்கிய எழுத்துருக்கள் பற்றி இக்காணொளியில் விளக்கமாக எடுத்துரைக்கிறார். முரசு அஞ்சல் செயலித் தொகுப்புல் முன்னர் இருந்த பழைய எழுத்துருக்களில் பலவும் மேம்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான தனித்துவமான எழுத்துருக்கள், ஆசிரியர்களைக் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கும் எழுத்துருக்கள், ஆங்கிலம்-தமிழ் என எந்த மொழியில் எழுத்து இருந்தாலும் ஒத்திசைவுடன் தெரியும் விதத்தில் உருவாக்கப்பட்ட எழுத்துருக்கள் எனப் பலவும் இக்காணொளியில் இடம்பெற்றுள்ளன.

காணொளிக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now