லெனொவோ A6000இல் செல்லினம்

LenovoA600

தங்கள் லெனொவோ A6000 கருவியில் செல்லினம் இயங்கவில்லை எனும் செய்தி பயனர் பலரிடம் இருந்து கடந்த சில வாரங்களாக வந்துகொண்டிருக்கின்றது.

A6000இல் இயங்கும் ஆண்டிராய்டு பதிப்பை 5.0.2க்கு மேம்படுத்தியவுடன் இந்தச் சிக்கல் எழுதுள்ளது என்பதும் எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. மேம்பாட்டிற்குமுன் இருந்த ஆண்டிராய்டு 4.4இல் சீராக இயங்கிய செல்லினம் 5.0.2இல் விசைமுகத்தை மறைத்து விடுகிறது என்றும் பயனர்கள் கூறியுள்ளனர்.

நாங்கள் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தச் சிக்கல் குறிப்பாக A6000 கருவியில் ஆண்டிராய்டு 5.0.2 இயங்கும்போது மட்டுமே ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மற்றக் கருவிகளில் இயங்கும் 5.0.2இல் செல்லினத்தின் செயல்பாட்டிற்கு எந்தச் சிக்கலும் இல்லை. மேலும் புதிதாக வெளிவந்திருக்கும் ஆண்டிராய்டு பதிப்பான மார்சுமெலோவிலும் (Marshmellow 6.0) செல்லினம் சரிவர இயங்குவதை உறுதி செய்துள்ளோம்.

A6000இல் உள்ள இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், பயனர்களும் பெரிய பங்கினை ஆற்றலாம். மற்றக் கருவிகளில் இல்லாத இந்தச் சிக்கல் லெனொவோ A6000இல் மட்டும் ஏன் ஏற்படுகிறது என்று லெனோவோ நிறுவனத்திடமே கேட்கலாம். எங்களைவிட அவர்களின் பயனர்களான உங்களுக்கே இதைக் கேட்பதற்கு அதிகம் உரிமை உண்டு.

இவ்வாறு லெனோவோ நிறுவனத்திடம் கேட்ட பயனர் ஒருவர், அவர்களின் 5.0.2 மேம்பாட்டில் சில சிக்கல்கள் உள்ளன என்று லெனோவோ நிருவனத்தினரே கூறியதாகத் தெரிவித்தார். அவர்களின் அடுத்த மேம்பாட்டில் இவற்றைத் தீர்க்க முயன்று வருவதாகக் குறினர் என்றும் சொன்னார். இவையெல்லாம் கலையும் வரை இந்தக் கருவிகளில் இயல்பாக இருந்த கிட்கெட் 4.4 இயக்கத்தைப் பயன்படுத்துவதே நல்லது என்று நாங்கள் நினைக்கின்றோம்.

மேலதிக தகவல்களோ தீர்வுகளோ உங்களிடம் இருந்தால் இங்கே நீங்கள் கருத்திடலாம் அல்லது sellinam.help at gmail dot com எனும் முகவரிக்கு எழுதலாம்.

Did you like this? Share it: