செல்லினம் செய்தித் தொகுப்பு – நவம்பர் 1, 2025

இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

கூகுள் ஜியோ கூட்டணி

கூகுள் ஜியோ கூட்டணி

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பரவலாக்கும் நோக்கில், கூகுள், ரிலையன்ஸ் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. இது பற்றிய அறிவிப்பு அக்டோபர் 30, 2025 அன்று கூகுள் வலைப்பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதன்மூலம், தகுதியுடைய ரிலையன்ஸ்…
சாட்ஜிபிடி ஓர் ஆண்டு இலவசம்

சாட்ஜிபிடி ஓர் ஆண்டு இலவசம்

ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் தனது முக்கியமான சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் நோக்கில், சாட்ஜிபிடிகோ (ChatGPT Go) திட்டத்தை ஓர் ஆண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. நவம்பர் 4-ம் தேதி தொடங்கும் இந்த…
சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள்

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள்

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம். சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தமிழ் சமூகம் சார்ந்த இவ்விரு பெரும் திட்டங்கள் குறித்த விளக்க உரையும் கலந்துரையாடலும் ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2025-ஆம் நாள் கோலாலம்பூரில் நடைபெற்றது.
மேம்படும் திரைப்பதிவு

மேம்படும் திரைப்பதிவு

ஆண்டிராய்டு இயங்குதள​த்தின் திரைப்பதிவு அம்சத்தில் கூகுள் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன। ஆண்டிராய்டு 11 இயங்குதளத்தில் 2020-ல்தான் முதன்முதலாக திரைப்பதிவு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது
விண்டோ​ஸ் புதிய பதிப்பு

விண்டோ​ஸ் புதிய பதிப்பு

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 25எச்2 புதிய பதிப்பை வெளியிட்டிருக்கிறது. இது வெறும் மென்பொருள் புதுப்பிப்பு மட்டுமல்ல, மாறிவரும் கணினி உலகிற்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு, பயனர் அனுபவம்…
டியோலிங்கோ – கூகுள் – போட்டி

டியோலிங்கோ – கூகுள் – போட்டி

மொழிக் கற்றல் துறையில் டியோலிங்கோ செயலி நீண்ட காலமாக முன்னணியில் இருந்து வருகிறது. ஆனால் அதற்கு போட்டியாக கூகுள் தனது மொழிபெயர்ப்பு செயலியில் புதிய பயிற்சி முறையை (Practice Mode) அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதில்…
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now