பேக்-மேன் சிறப்பு டூடுல்

உங்களுக்கு பேக்-மேன் விளையாட்டு நினைவிருக்கிறதா? மஞ்சள் நிற வட்டம் ஒன்று பேய்களைத் தவிர்த்து பந்துகளை சாப்பிடும் விளையாட்டு. கூகுள் அந்த நினைவுகளை திரும்ப கொண்டு வந்துள்ளது – பேக்-மேன் விளையாட்டின் 45-வது ஆண்டு நிறைவை ஹாலோவீன் சிறப்பு பதிப்பாக கொண்டாடியது.

pac man

விளையாடக்கூடிய டூடுல்

கூகுள் தேடுதளத்தின் முதன்பக்கத்திலேயே இந்த விளையாட்டை விளையாட முடியும். பேக்-மேனின் உரிமையாளரான பண்டாய் நாம்கோ (Bandai Namco) நிறுவனத்துடன் இணைந்து எட்டு நிலைகளை உருவாக்கியுள்ளனர். அதில் நான்கு பேய் வீடு மாதிரியான பாதைகள் (Haunted House Mazes) உள்ளன.

இந்த முறை பேக்-மேன் பிக்சல் பாணியில் ஊதா நிற சூனியக்காரத் தொப்பியை அணிந்துள்ளது. விளையாட்டு முழுவதும் வெவ்வேறு உடைகளும் கிடைக்கும். பாதைகள் சிலந்தி வலைகள், செதுக்கப்பட்ட பூசணிக்காய்கள், பேய் வீடு பின்னணி போன்ற ஹாலோவீன் அலங்காரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2010-ல் பேக்-மேனின் 30-வது ஆண்டு நிறைவை கொண்டாட கூகுள் முதல் முறை விளையாடக்கூடிய டூடுலை வெளியிட்டது. ஒலியும் விளையாடும் வசதியும் கொண்ட முதல் கூகுள் டூடுல் அது. கின்னஸ் உலக சாதனைப் பதிவின்படி, அந்த விளையாட்டை மக்கள் 500 மில்லியன் மணி நேரம் விளையாடினர்.

இந்த ஹாலோவீன் பதிப்பு கூகுள் முதன்பக்கத்தில் இரண்டு நாள்களுக்கு மட்டுமே இருந்தது. பின்னர் கூகுளின் டூடுல் காப்பகத்தில் (Doodle Archive) சேமிக்கப்பட்டுள்ளது. 1980-ல் டோரு இவாடானி (Toru Iwatani) உருவாக்கிய இந்த எளிய விளையாட்டு 45 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது.

பேக் மேன் டூடுல் விளையாட்டு

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now