கடிகாரச் செயலியை நீக்கியது கூகுள்

கூகுள் தனது கடிகாரச் செயலியை (Clock App) பிக்செல் வாட்ச் தவிர மற்ற அனைத்து வியர்ஓஎஸ் திறன்கடிகாரங்களிலிருந்தும் நீக்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி வாட்ச், ஒன்பிளஸ் வாட்ச் போன்றவற்றில் இனி இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது.

Apple smart watch

என்ன நடக்கிறது?

கூகுள் அறிவித்துள்ளபடி, வியர் ஓஎஸ் திறன்கடிகார பயனர்கள் இனி பிளேஸ்டோரில் இருந்து கடிகார செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது. ஏற்கனவே நிறுவியவர்கள் செயலியை தொடர்ந்து பயன்படுத்தலாம், ஆனால் புதுப்பிப்புகள் கிடைக்காது. பிக்செல் வாட்ச் மட்டும் முன்பே நிறுவப்பட்டு தொடர்ந்து புதுப்பிப்புகளை பெறும்.

கடந்த சில நாள்களாக பயனர்கள் கேலக்ஸி வாட்ச், ஒன்பிளஸ் வாட்ச் போன்ற சாதனங்களில் “This item is not compatible with your device” என்ற பிழைச் செய்தியை பார்த்து வந்தனர். இது பிழை என்று நினைத்தனர் பயனர்கள். இப்போது இது திட்டமிட்ட மாற்றம் என்பது உறுதியாகியுள்ளது.

கூகுளின் கூற்றுப்படி, “உங்கள் விருப்பக் கடிகாரங்கள் வியர் ஓஎஸ்-இல் தங்கள் சொந்த இயல்புநிலை கடிகார செயலிகளை வழங்குகின்றன”. அதனால் தனி கூகுள் கடிகார செயலி தேவையில்லை என்கிறது நிறுவனம்.

பயனர்களுக்கு பாதிப்பு

கடிகார செயலியில் அலாரம், நேரங்காட்டி, நேர அளவி போன்ற முக்கியச் செயல்பாடுகள் உள்ளன. மூன்றாம் தரப்பு மூலங்களிலிருந்து பக்கவாட்டில் ஏற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அலாரம், நேரங்காட்டிக்கு இடையேயான ஒத்திசைவு திறன்பேசிக்கும் திறன்கடிகாரத்திற்கும் இடையே செயல்படவில்லை. ஏற்கனவே நிறுவியவர்கள் பல புதிய அம்சங்களை இழக்கிறார்கள்.

வானிலைக்குப் பிறகு கடிகாரமும்

வியர் ஓஎஸ் 6-உடன் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்செல் வானிலை செயலிக்குப் பிறகு கடிகார செயலியும் பிக்செல் கருவியில் மட்டும் பயன்படும் விதமாக மாற்றப்பட்டுள்ளது. கூகுள் ஆப்பிளின் வழியை பின்பற்றுவது போல தெரிகிறது என விமரிசகர்கள் சொல்கிறார்கள். பிக்செல் வாட்ச் உரிமையாளர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. மற்ற திறன்கடிகார உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களின் சொந்த செயலிகளை நம்ப வேண்டும்.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now