செல்லினம் செய்தித் தொகுப்பு – நவம்பர் 8, 2025

இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

முரசு அஞ்சல் இலவசப் பதிப்பு

முரசு அஞ்சல் இலவசப் பதிப்பு

“செல்லினத்தில் பேருதவியாக இருக்கும் சொற்பரிந்துரை அம்சம் விண்டோசில் கிடைக்குமா?” என்று செல்லினம் பயனர்கள் அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். திறன்பேசியில் நாம் எல்லோருமே செல்லினத்தின் சொற்பரிந்துரையைப் பயன்படுத்தியிருப்போம். ஆனால் அதே அனுபவத்தை விண்டோசில்…
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முந்தைய எழுத்துகள் இருக்கும் பக்கத்தைத் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர், கவிஞர் மகுடேசுவரன். களிநயமான இந்தப் பதிவு எழுத்துகள் அடைந்துள்ள மாற்றம் பற்றி விளக்குகிறது. செல்லினம் பயனர்களுக்காக அதைக்…
பேக்-மேன் சிறப்பு டூடுல்

பேக்-மேன் சிறப்பு டூடுல்

உங்களுக்கு பேக்-மேன் விளையாட்டு நினைவிருக்கிறதா? மஞ்சள் நிற வட்டம் ஒன்று பேய்களைத் தவிர்த்து பந்துகளை சாப்பிடும் விளையாட்டு. கூகுள் அந்த நினைவுகளை திரும்ப கொண்டு வந்துள்ளது – பேக்-மேன் விளையாட்டின் 45-வது ஆண்டு…
மொழி கற்பிக்கும் செயலிகள்

மொழி கற்பிக்கும் செயலிகள்

மொழி கற்பிக்கும் செயலிகள் நவீன உலகில் கற்றலின் விதிமுறைகளை முழுமையாக மாற்றியுள்ளன. எளிமை, தனிப்பட்ட அனுபவம், விளையாட்டுத்தன்மை ஆகியவற்றை இவை கொண்டிருக்கின்றன. இதனால் கோடிக்கணக்கானோர் பல்மொழி திறனாளர்களாக மாறும் வாய்ப்பு எளிதாகிறது. பயணம்,…
யூட்யூப் : அசைந்தாடும் விருப்பம்

யூட்யூப் : அசைந்தாடும் விருப்பம்

யூடியூப் தனது தளத்தில் உள்ள விருப்பக்குறி பொத்தானுக்கு (Like Button) புதிய தனிப்பயன் அசைவூட்டங்களை (Custom Animations) அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் பார்க்கும் காணொளியின் வகையைப் பொறுத்து இந்த அசைவூட்டங்கள் மாறும்.
ஆப்பிள் மீண்டும் முதலிடம்

ஆப்பிள் மீண்டும் முதலிடம்

உலகின் மிகச்சிறந்த நிறுவன அடையாளங்கள் பட்டியலில் ஆப்பிள் தொடர்ந்து பன்னிரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் சுற்றி பரபரப்பை உருவாக்கும் வேளையில், நம்பகத்தன்மையும் வடிவமைப்பும் இன்னும் முக்கியம்…
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now