செல்லினம் செய்தித் தொகுப்பு – ஜனவரி 24, 2026

இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

மாணவர்களுக்கு முரசு அஞ்சல்

மாணவர்களுக்கு முரசு அஞ்சல்

மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல், மொழியியல் துறை மாணவர்களுக்கு புதிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளை தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கம் இலவசமாக வழங்கியது. 2026, ஜனவரி 21ஆம் நாள் புதன்கிழமையன்று கோலாலம்பூரில்…
செயற்கை நுண்ணறிவு மருத்துவர்

செயற்கை நுண்ணறிவு மருத்துவர்

ஓபன்ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி மருத்துவம் (ChatGPT Health) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் உடல்நலத் தகவல்களையும் சாட்ஜிபிடி-யின் திறமையையும் பாதுகாப்பாக ஒன்றிணைத்து புதிய அம்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
காட்சிகள் ​மூலம் கற்றுத்தரும் ஜெமினி

காட்சிகள் ​மூலம் கற்றுத்தரும் ஜெமினி

அண்மைக் காலங்களில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரிதும் உதவும் வகையில் உள்ளன. தேடல், கல்வி, பயணம், அலுவலகப் பணி, திறன்பேசி பயன்பாடு போன்ற பல துறைகளில் இந்த…
ஹெல்வெடிகா: ஓர் எழுத்துருவின் பயணம்

ஹெல்வெடிகா: ஓர் எழுத்துருவின் பயணம்

எழுத்துருக்கள் தகவலை மட்டும் வெளிப்படுத்துவன அல்ல; ஒரு காலத்தின் அழகியல் எண்ணங்களையும் சிந்தனை முறையையும் அமைதியாக பதிவு செய்யும் கருவிகளாகவும் அவை செயல்படுகின்றன. நம்மை அறியாமலேயே அன்றாட வாழ்வில் வழிகாட்டும் சாலை குறியீடுகள்…
எளிமையாக வாசிக்கலாம்

எளிமையாக வாசிக்கலாம்

கூகுள் தனது வாசிப்பு அனுபவத்தை எளிமையாக்கும் வாசிப்பு முறை (Reading Mode) அம்சத்தில் புதிய மேம்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது
பொங்கல் வாழ்த்து!

பொங்கல் வாழ்த்து!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்।  2005ஆம் ஆண்டு, ஒரு பொங்கல் திருநாளில்தான் செல்லினம் செயலி வெளியிடப்பட்டது। அதன் பிறகும் செல்லினம் செயலியின் பல மேம்பாடுகளை அவ்வப்போது பொங்கல் திருநாளில் வெளியிட்டு வந்திருக்கிறோம்
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now