இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

தமிழி என்றழைப்போம் : மார்க்சியகாந்தி
மொழியும் அதன் எழுத்து வரிவடிவமும் ஒன்றுபோலவே வளர்ச்சியடைவதில்லை. வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு படிநிலையில் வளர்பவை. இந்தப் புரிதலை முன்னிறுத்தி, சென்னையில் பிப்ரவரி மாதம் நடந்த உலகளாவிய கல்வெட்டியல் மாநாட்டில் தமிழி பற்றிய ஆய்வுக்கட்டுரை…

காணொளி முகப்புப்படத்துக்கான எழுத்துரு
காணொளி முகப்புப்படத்தில் எழுத்துகள் என்பது வெறும் தகவல் சொல்லும் கருவி அல்ல. அவை பார்வையாளரின் கண்களை முதலில் பிடிக்கும் சக்தி கொண்டவை. ஒரு முகப்புப்படத்தை பார்க்கும் சில விநாடிகளில், அந்த காணொளி எதற்காக,…

தமிழின் பழைய வரிவடிவங்கள்
தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தக் காலத்துக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த ணை, லை எழுத்துகள் இன்றும் சில சமயங்களில் எடுத்தாளப்படுகின்றன. அதை எப்படிக் கணினிச் செயலிகளில் கொண்டு வரலாம் என்பதை விளக்கி, செல்லினம், முரசு…

முகநூல் முத்திரை
வெறும் ஒரு நீல நிற செவ்வகம். அதில் வெள்ளை நிற சிறிய எழுத்துகள். இவ்வளவுதான் முகநூலின் முத்திரை. ஆனால் இந்த எளிமையான வடிவமைப்பு இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களை இணைக்கும் ஒரு சமூக…

ஆர்.முத்தையா உருவாக்கிய தட்டச்சுப்பொறி
இன்று பெப்ரவரி 24 — தமிழ் தட்டச்சுப்பொறியை உருவாக்கிய ஆர். முத்தையா பிறந்த நாள். 1886ஆம் ஆண்டு இன்றைய நாளில், யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்த இவர், தமிழ் மொழியின் வரலாற்றில் தவிர்க்க முடியாத…

எழுத்துருவே சாட்சி!
ஒரு காலத்தில் ஆவணத்தின் உண்மைத்தன்மையை நிரூபிக்க கையெழுத்தும் கையொப்பமும் முக்கியமான சான்றுகளாக இருந்தன. ஆனால் இன்றைய எண்ணிம உலகில் அந்த ஆவணத்தை உருவாக்கப்பயன்பட்ட எழுத்துருவே உண்மையை உரக்கச்சொல்லும் சாட்சியாக திகழ்கிறது.
